/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - 11 சைக்கிள்கள் திருடிய திரிபுரா வாலிபர் கைது
/
பொது - 11 சைக்கிள்கள் திருடிய திரிபுரா வாலிபர் கைது
பொது - 11 சைக்கிள்கள் திருடிய திரிபுரா வாலிபர் கைது
பொது - 11 சைக்கிள்கள் திருடிய திரிபுரா வாலிபர் கைது
ADDED : ஜூன் 15, 2025 12:13 AM
நீலாங்கரை,பாலவாக்கம், கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 41. கடந்த 9ம் தேதி இரவு, வீட்டு முன் நிறுத்திய இவரது மகளின் சைக்கிள் திருடு போனது.
புகாரின்பேரில், நீலாங்கரை போலீசார் விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பாபன்ஹசன், 24, சைக்கிள்களை திருடியது தெரிந்தது.
இவர், இரண்டு மாதங்களுக்கு முன் ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு நிறுவனத்தில் துாய்மை பணிக்கு சேர்ந்தார். இவரது நடவடிக்கை பிடிக்காமல், அந்நிறுவனம் ஒரு மாதத்தில் அவரை வேலையை விட்டு நிறுத்தியது.
இதையடுத்து அவர் நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் பகுதியில் வீடு, கடை முன் நிறுத்தும் சைக்கிள்களை திருடி, விற்பனை செய்து வந்தார். நேற்று, பாபன்ஹசனை கைது செய்த போலீசார், அவர் விற்பனை செய்த, 11 சைக்கிள்களை பல்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்தனர்.