/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆடு வியாபாரியிடம்ரூ. 3 லட்சம் ஆட்டை
/
ஆடு வியாபாரியிடம்ரூ. 3 லட்சம் ஆட்டை
ADDED : ஜன 14, 2024 12:33 AM
செங்குன்றம், செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில், கொடிகாத்த குமரன் தெருவைச் சேர்ந்தவர் முகமது அனீப், 34. இவர் அதே பகுதியில் ஆட்டு இறைச்சிக் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை செங்குன்றம், காவாங்கரை அடுத்த தண்டல் கழனி மார்க்கெட்டில், ஆடுகள் வாங்க தன் 'செவர்லட் குருஸ்' காரில் வந்துள்ளார்.
அப்போது, காரிலிருந்து இறங்கிச் சென்று, ஆடுகளை தரம் பார்த்து, திரும்பி வந்தபோது, காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, டேஷ் போர்டில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் முகமது அனீப் அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

