ADDED : அக் 23, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் தேசராணி, 73. இவருடைய பேரன், தட்சிணாமூர்த்தி, 19; மீன் வியாபாரி. நேற்று அதிகாலை, பாட்டியும், பேரனும் தங்களது ஓடு வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக, ஓடுகள் மற்றும் கூரை ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், பாட்டி - பேரன், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

