ADDED : பிப் 02, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம், சென்னை மாதவரம் போலீசார், நேற்று காலை போதைப் பொருள் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாதவரம் பஜார் சாலை மற்றும் சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, மாதவரம் பஜார் சாலையில் செல்வஞானம் மளிகை கடை மற்றும் லாரி நிறுத்த வளாகத்தில் உள்ள முருகன் டீ கடையில் சோதனை செய்தனர். அங்கு, 20 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு, 30,000 ரூபாய்.
இதுதொடர்பாக, குட்கா வியாபாரிகளான மாதவரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜமார்த்தாண்டம், 55, சிவகங்கையைச் சேர்ந்த முருகன், 44, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

