நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, எழும்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி இமான், 27 மீது கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் ஜாமினில் வெளி வந்து, தலைமறைவானார்.
சிந்தாதிரிப்பேட்டை போலீசார் இமானை தேடி வந்தனர்.
இந்நிலையில் எழும்பூர், தெற்கு கூவம் சாலையில் குப்பை மேடு பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு இமான், அவரது கூட்டாளிகள் சுனில் குமார், 27, முகமது ஷேக் மீரான், 29, ஆகியோர் மது அருந்திக்கொண்டிருந்தனர். தப்பி ஓடிய இமானை போலீசார் விரட்டி பிடித்தனர். கூட்டாளிகள் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

