/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.சி.எப்., புதிய ஜி.எம்., பொறுப்பேற்பு
/
ஐ.சி.எப்., புதிய ஜி.எம்., பொறுப்பேற்பு
ADDED : பிப் 02, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையின் புதிய பொது மேலாளராக இருந்த மால்யா பணி ஓய்வு பெற்றதை அடுத்து, சுப்பாராவ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 1987ம் ஆண்டின் இந்திய ரயில்வே இயந்திரப் பொறியியல் சேவைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். தென்மேற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளராகவும், இதர ரயில்வேக்களில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளராகவும், தென்மேற்கு ரயில்வே மைசூரில் உள்ள ரயில்பெட்டி பராமரிப்புத் தொழிற்சாலையின் தலைமை தொழிற்கூட மேலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

