/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகாரளித்த பெண்ணை மிரட்டிய இன்ஸ்.,சுக்கு ரூ.50,000 அபராதம்
/
புகாரளித்த பெண்ணை மிரட்டிய இன்ஸ்.,சுக்கு ரூ.50,000 அபராதம்
புகாரளித்த பெண்ணை மிரட்டிய இன்ஸ்.,சுக்கு ரூ.50,000 அபராதம்
புகாரளித்த பெண்ணை மிரட்டிய இன்ஸ்.,சுக்கு ரூ.50,000 அபராதம்
ADDED : ஜூன் 25, 2025 12:13 AM
சென்னை, சொத்து பிரச்னையில் புகார் அளித்த பெண்ணை மிரட்டிய இன்ஸ்பெக்டருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஷெனாய் நகரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
தந்தை, சகோதரருடன் எனக்கு சொத்து பிரச்னை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் எனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து, கடந்த 2023 மார்ச்சில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், என் புகாரை அப்போதைய இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி முறையாக விசாரிக்காமல், என்னையும், எனது கணவரையும் காவல் நிலையத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டினர்.
மேலும், பொய் புகார் பதிவு செய்து கைது செய்து விடுவதாகவும் அச்சுறுத்தினர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டக் மீது சட்டப்படி நடவடிககை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
'மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணையில், மனுதாரர் பிரியதர்ஷினி மற்றும் அவரது கணவரை இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி துன்புறுத்தியதும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் உறுதியானது. இதன் வாயிலாக அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதும் தெரிகிறது.
எனவே, பிரியதர்ஷினிக்கு தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.