/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
21ல் வாலிபால் தேர்வு போட்டி சப் - ஜூனியருக்கு அழைப்பு
/
21ல் வாலிபால் தேர்வு போட்டி சப் - ஜூனியருக்கு அழைப்பு
21ல் வாலிபால் தேர்வு போட்டி சப் - ஜூனியருக்கு அழைப்பு
21ல் வாலிபால் தேர்வு போட்டி சப் - ஜூனியருக்கு அழைப்பு
ADDED : ஜன 19, 2024 12:14 AM
சென்னை, சென்னை மாவட்ட அளவிலான வாலிபால் தேர்வு போட்டியில் பங்கேற்க, சப் - ஜூனியர் சிறுவர், சிறுமியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மாநில அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, வேலுார் வி.ஐ.டி.,யில், இம்மாதம் 27ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்க உள்ளது.
போட்டியில், சென்னை உட்பட மாநில முழுதும் இருந்து அணிகள் பங்கேற்கின்றன.
இதில், சென்னை அணிக்கான சப் - ஜூனியர் வீரர், வீராங்கனையரை தேர்வு செய்யும் போட்டி, வரும் 21ம் தேதி, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில், மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.
இதற்கு, 2008 ஜன., 1ம் தேதிக்குப் பின் பிறந்த சிறுவர் - சிறுமியர், ஆதார் மற்றும் பிறப்பு சான்றுடன் நேரடியாக பங்கேற்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94448 42628, 98418 16778 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட வாலிபால் சங்க செயலர் ஸ்ரீகேசவன் தெரிவித்தார்.

