நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பா பாய், 71. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இவருக்குச் சொந்தமான, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, சிலர் போலியான ஆவணங்கள் மூலம் விற்று, மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து அவர், ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், சென்னை கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அன்வர், 55, பாளையதேவன், 51, மதன்குமார், 40, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

