/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரீபெய்டு ஆட்டோ சேவை கிளாம்பாக்கத்தில் துவக்கம்
/
பிரீபெய்டு ஆட்டோ சேவை கிளாம்பாக்கத்தில் துவக்கம்
ADDED : ஜன 19, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிளாம்பாக்கத்தில் பொதுமக்கள் வந்து செல்ல பிரீபெய்டு ஆட்டோ சேவை இல்லை. இதற்கான ஏற்பாடுகளை சி.எம்.டி.ஏ., செய்ய வேண்டும் என, ஆட்டோ தொழிற்சங்க அமைப்புகள் வலியுறுத்தின.
இது குறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது.
இதன் எதிரொலியாக நேற்று, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அவசரகதியில் ஏற்பாடுகளை செய்து, பிரீபெய்டு ஆட்டோ சேவைக்கான முன்பதிவு மையத்தை துவக்கினர். 1 கி.மீ.,க்கு, 18 ரூபாய் என்ற அடிப்படை கட்டணத்துடன் இங்கு, ஆட்டோ பயணத்துக்கான முன்பதிவு செய்யப்படுகிறது.

