/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
‛'லைட் ஹவுஸ்' குடியிருப்பு ஜெர்மன் அதிகாரி ஆய்வு
/
‛'லைட் ஹவுஸ்' குடியிருப்பு ஜெர்மன் அதிகாரி ஆய்வு
ADDED : ஜன 23, 2024 12:21 AM

சென்னை, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில், மத்திய அரசின் 'லைட் ஹவுஸ்' திட்டத்தில், 116 கோடி ரூபாயில், ஆறு மாடியில் 12 பிளாக்குகள் கொண்ட 1,152 வீடுகள் கட்டப்பட்டன.
நுாலகம், ரேஷன் கடை, ஆவின், குழந்தைகள் மையம், கடைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டன.
இந்தியாவில் முன்மாதிரியாக கட்டப்பட்ட முதல் குடியிருப்பு இது. இந்த குடியிருப்பை 2022ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த குடியிருப்பை போல் கேரளாவிலும் கட்ட அம்மாநில அமைச்சர், அதிகாரிகள், கடந்த ஆண்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ஜெர்மன் நாட்டின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட இயக்குனர் திரெசா கெர்பர், நேற்று குடியிருப்பை ஆய்வு செய்தார்.குடியிருப்பின் கட்டமைப்பு, வளாக வசதிகளை பார்வையிட்டனர். சிலரின் வீடுகளுக்கு சென்று, மக்களிடம் பேசினர்.
அப்போது, சிலர் முன் இருந்ததை விட அதிக வசதியுடன் இருக்கிறோம். ஆனால், குடியிருப்பு திறந்து ஓராண்டு முறையாக பராமரிக்கப்பட்டது. தற்போது, வளாகம் போதிய பராமரிப்பில் இல்லை. பாதுகாப்பு குறைபாடு உள்ளது' என கூறினர்.
இதை, அதிகாரிகள், ஜெர்மன் அதிகாரியிடம் மொழி பெயர்த்து கூறினர். பின், குடியிருப்பின் வடிவமைப்பு குறித்து, நிர்வாக பொறியாளர் குமரேசன் விளக்கி கூறினார்.இன்று, ஜெர்மன் நாட்டு மீடியா குழுவினர், லைட் ஹவுஸ் குடியிருப்பு வசதிகளை படம் பிடித்து, மக்களிடம் கருத்து கேட்க உள்ளனர்.

