/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடனுதவி
/
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடனுதவி
ADDED : ஜன 19, 2024 12:23 AM
சென்னை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், 964 வணிகர்களுக்கு, 96 லட்சம் ரூபாய் சிறு வணிக கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துஉள்ளார்.
அவரது செய்தி குறிப்பு:
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவ, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, முதல்வரின் சிறு வணிக கடன் திட்டம் துவக்கப்பட்டது.
அத்திட்டத்தின் கீழ், 4 சதவீத வட்டியில், 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இதை வாரம், 200 ரூபாய் என, 50 வாரங்களில் செலுத்தலாம்.
இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 5ம் தேதி முதல், 18ம் தேதி வரை, 1,771 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 964 நபர்களுக்கு, 96.30 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடன் வழங்கப்படும். தொடர்ந்து நடக்கும் முகாம்களில், சிறு வணிகர்கள் வங்கி கிளைகளை நேரில் அணுகி கடன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

