/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் அரிசி மூட்டை ஏற்றி வந்த லாரி சேமிப்பு கிடங்கு சுவரில் மோதி விபத்து

ADDED : ஜூன் 25, 2025 03:03 PM

சிட்லப்பாக்கம், ஜூன் 25-
சிட்லப்பாக்கத்திற்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, மத்திய அரசு சேமிப்பு கிடங்கு சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. தினசரி, பல்வேறு இடங்களில் இருந்து, இந்த கிடங்கிற்கு ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, தேக்கி வைத்து, பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, ஆவடியில் இருந்து, 24 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று இந்த கிடங்கிற்கு வந்தது. லாரியை பெருமாள், 40, என்பவர் ஓட்டினார்.
சேமிப்பு கிடங்கு அருகே வந்தபோது, திடீரென சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று சென்றதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து, சேமிப்பு கிடங்கின் சுற்றுச்சுவரை இடித்துகொண்டு உள்ளே பாய்ந்தது.
இந்த விபத்தில், ஓட்டுநர் பெருமாள் காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.