ADDED : ஜன 24, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம், மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம், 200 அடி சாலையில் பாரத் பெட்ரோல் 'பங்க்' உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள பழைய மின் கம்பத்தை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது.
இதை, பெட்ரோல் பங்க் மேனேஜர் சூர்யா கண்காணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திருவாரூரைச் சேர்ந்த காமராஜ், 59, என்ற லாரி டிரைவர், சூர்யாவிடம் கொடுத்து வைத்திருந்த லாரி சாவியை வாங்க சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த மின் கம்பம், காமராஜ் தலையில் இடித்தது. இதனால் காயமடைந்து மயங்கினார். ஆம்புலன்ஸ் மூலம், ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

