/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவானந்த சாலையில் நாளை மாரத்தான், மிதிவண்டி போட்டி
/
சிவானந்த சாலையில் நாளை மாரத்தான், மிதிவண்டி போட்டி
சிவானந்த சாலையில் நாளை மாரத்தான், மிதிவண்டி போட்டி
சிவானந்த சாலையில் நாளை மாரத்தான், மிதிவண்டி போட்டி
ADDED : செப் 26, 2025 02:24 AM
சென்னை :
சென்னை மாவட்டம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, இந்தாண்டிற்கான மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி, நாளை காலை 5:30 மணிக்கும், மிதிவண்டி போட்டி, காலை 7:00 மணிக்கும் நடக்கின்றன.
போட்டிகள், சுவாமி சிவானந்த சாலையில் துவங்கி, நேப்பியர் பாலம், தீவுத்திடல் வழியாக, மீண்டும் அதே சாலையில் நிறைவடைகின்றன.
மிதிவண்டி போட்டி, 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவ --- மாணவியருக்கு நடக்கிறது. மாரத்தான், 17 முதல் 25 வயது மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவாக நடக்கிறது.
நம் நாட்டில் தயாரான மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், நேரடியாக போட்டியின் நேரத்தில் வயது சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு, 74017 03480 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.