/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதவரத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலை
/
மாதவரத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலை
ADDED : ஜன 23, 2024 12:32 AM
சென்னை, ஆவின் வாயிலாக, நாள்தோறும் 14.5 லட்சம் லிட்டர் பால், சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடசென்னைக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் மாதவரம் பால் பண்ணையிலும், தென்சென்னைக்கு தேவையான பால் பாக்கெட் சோழிங்கநல்லுார் பால் பண்ணையிலும், மத்தியசென்னைக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் அம்பத்துாரிலும் தயாரிக்கப்படுகின்றன.
சென்னையில், பால் விற்பனையை 25 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, பால் டப்பாக்களை கழுவுதல், பால் பாக்கெட் பேக்கிங் செய்தல், அவற்றை நேரடியாக வாகனத்தில் ஏற்றும் பணிகளை, நவீன முறையில் இயந்திரங்கள் வாயிலாக செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, மாதவரம் பால் பண்ணையில், 81 கோடி ரூபாயில் அதிநவீன பால் பாக்கெட் ஆலையை ஆவின் அமைக்கவுள்ளது. இதற்காக, இயந்திரங்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகள் துவங்கிஉள்ளது. நடப்பாண்டிற்குள், இந்த அதி நவீன பால் தொழிற்சாலையை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

