/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை அமைச்சர் தகவல் :

ADDED : ஜன 14, 2024 12:31 AM

பூந்தமல்லி பொங்கல் பண்டிகையொட்டி, பூந்தமல்லி புறவழி சாலை சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், ஓசூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், நேற்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அங்கு திடீர் ஆய்வு செய்து, பயணியருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டிருந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது...பூந்தமல்லி சிறப்பு பேருந்து நிலையத்திலிருந்து, கடந்த ஆண்டை விட கூடுதலாக 22 பேருந்துகளுடன் 586 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது பூந்தமல்லி நகர மன்ற தலைவர், நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.