/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாதவரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு
/
மாதவரம் பஸ் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு
ADDED : ஜன 14, 2024 02:17 AM
மாதவரம்,
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால், தமிழக அரசின் சார்பில், பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கரன், நிருபர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது போல, மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும், தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

