/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய 'சைக்கிள் போலோ' தமிழக சிறுமியர் அபாரம்
/
தேசிய 'சைக்கிள் போலோ' தமிழக சிறுமியர் அபாரம்
ADDED : ஜன 24, 2024 12:21 AM

சென்னை, தேசிய அளவிலான 'சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப்' போட்டியில், தமிழக ஜூனியர் சிறுமியர் அணி, மூன்றாம் இடத்தை பிடித்தது.
இந்திய சைக்கிள் போலோ கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான சப் - ஜூனியர் மற்றும் ஜூனியருக்கான சைக்கிள் போலோ போட்டி, மத்திய பிரதேசத்தில் கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, மாநில அணிகள் பங்கேற்றன.
இதில், ஜூனியர் பிரிவில், தமிழகம் உட்பட 24 அணிகள் மோதின. அதில் அரையிறுதி வரை முன்னேறிய தமிழக அணி, மூன்றாம் இடத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், தமிழக அணி, 9 - 3 என்ற கோல் கணக்கில், கேரளாவை தோற்கடித்து, வெள்ளி பதக்கம் வென்றது.
இறுதிப் போட்டியில் சத்தீஷ்கர் அணி, 12 - 6 என்ற கணக்கில் உத்திர பிரதேச அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. சப் - ஜூனியர் பிரிவிலும் சத்தீஷ்கர் அணி, 8 - 2 என்ற கணக்கில் உத்திர பிரதேச அணியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. மூன்றாம் இடத்தை கேரளா அணி கைப்பற்றியது.

