/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி
/
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி
ADDED : ஜன 23, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர், பெரம்பூர், குருமூர்த்தி கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி, 73. இவரது வீட்டில், கடந்த 11ம் தேதி சமையல் 'காஸ்' கசிந்து, விபத்து ஏற்பட்டுள்ளது.
இதை உணராத சுந்தரி, வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றிய போது, தீ விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த மூதாட்டி, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

