/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
/
அழுகிய நிலையில் மூதாட்டி உடல் மீட்பு
ADDED : ஜூன் 24, 2025 12:27 AM
மாதவரம், தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி கோமதி, அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் கோமதி, 75. சர்க்கரை நோயால் பாதித்த இவர், மூன்று ஆண்டுகளாக வீட்டில் தனியே வசித்து வந்தார்.
அதே பகுதியில் வசித்து வந்த கோமதியின் மகள் உமா, தாயை அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வார்.
கடந்த 20ம் தேதி தாயை பார்த்து விட்டு சென்ற உமா, அதன் பின் தாயை பார்க்க செல்லவில்லை. இந்நிலையில், கோமதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் உமாவுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த உமா, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கோமதி உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.