/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உடல் உறுப்பு தானம் ஏழு பேருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்பு தானம் ஏழு பேருக்கு மறுவாழ்வு
ADDED : ஜன 14, 2024 02:13 AM
சென்னை, சென்னை சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 27. சமீபத்தில் அண்ணா சாலையில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.
அவரது குடும்பத்தினர், உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தனர். இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட ஏழு உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன
உறுப்பு தானம் அளித்த அவரது உடலுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மரியாதை செலுத்தினார்.
பின், அவர் கூறுகையில், ''மூளைச்சாவு அடைந்த ராமமூர்த்தியின் உடல் உறுப்புகள் தானத்தால், ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த, 61 பேர் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.

