/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.46 லட்சத்தில் முடிச்சூரில் பூங்கா
/
ரூ.46 லட்சத்தில் முடிச்சூரில் பூங்கா
ADDED : ஜன 24, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முடிச்சூர், முடிச்சூர் ஊராட்சி நவாப் அபிபுல்லா நகரில், 46 லட்சம் ரூபாயில் பூங்கா அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது.
முடிச்சூர் ஊராட்சி, முதல் வார்டு நவாப் அபிபுல்லா நகரில் பூங்காவுக்கான இடம் உள்ளது. காலி இடமாக உள்ள அந்த இடத்தில், பல்வேறு வசதிகளுடன் பூங்கா அமைக்க கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, தாம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 46 லட்சம் ரூபாயில் சுற்றுச்சுவர், நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்கு, பூச்செடி ஆகிய வசதிகளுடன் பூங்கா அமைக்க, சமீபத்தில் பூஜை போடப்பட்டது. இதற்கான பணிகள் துவங்க உள்ளன.

