/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஷ வாயு தாக்கி பிளம்பர் உயிரிழப்பு
/
விஷ வாயு தாக்கி பிளம்பர் உயிரிழப்பு
ADDED : ஜன 24, 2024 12:22 AM

சென்னைசென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், 48, ரமேஷ், 49; 'பிளம்பிங்' வேலை செய்து வருகின்றனர்.
நேற்று, திருமுல்லைவாயில் ஹாஸ்பிடல் சாலை, நடேசன் தெருவிலுள்ள அரவிந்த் அக் ஷயம் அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியிலுள்ள நீர்மூழ்கி மோட்டாரை பழுது பார்க்கச் சென்றனர்.
ரமேஷ் 'பிளம்பிங்' பொருட்கள் வாங்க சென்ற நிலையில், சுரேஷ் மோட்டாரை சரி செய்து, மீண்டும் தொட்டிக்குள் பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது, தொட்டிக்குள் சுரேஷ் கிடந்ததால், அவரை மீட்க இறங்கியுள்ளார். உடனே, அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி உள்ளார்.
அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி வந்த ஆவடி, அம்பத்துார் தீயணைப்பு வீரர்கள், மேற்கண்ட இருவரையும் மீட்டனர். சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், ரமேஷ் ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து, திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து, ரமேஷின் அண்ணன் ராஜேஷ் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

