/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிராமத்திற்கே அழைத்துச் சென்ற போலீசாரின் பொங்கல் கொண்டாட்டம்
/
கிராமத்திற்கே அழைத்துச் சென்ற போலீசாரின் பொங்கல் கொண்டாட்டம்
கிராமத்திற்கே அழைத்துச் சென்ற போலீசாரின் பொங்கல் கொண்டாட்டம்
கிராமத்திற்கே அழைத்துச் சென்ற போலீசாரின் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 14, 2024 02:31 AM

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் போலீசாரின் பொங்கல் கொண்டாட்டம், அனைவரையும் கிராமத்திற்கே அழைத்துச் சென்றது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு சார்பிலும், ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை சார்பிலும், புனித தோமையர்மலையில் ஆயுதப்படை சார்பிலும் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.
மைதானத்தில், கிராமிய கலை நயத்துடன், கோவில், நாற்று நடுதல், மண்பானை செய்தல், கிளி ஜோசியம், கரும்பு விற்பனை கடைகள், ஜவ்வு மிட்டாய் கடை என, கிராமத்தின் கொண்டாட்டத்தை தத்ரூபமாக கண் முன்னே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரது குடும்பத்தினருக்கான, ரங்கோலி போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, உறியடித்தல், லக்கி கார்னர், நடனப்போட்டி, சிறுவர்களுக்கான ஓட்ட பந்தயம், சாக்கு ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் ஆண் மற்றும் பெண் போலீசார் அவர்களது குழந்தைகளின் பரதநாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம் நடந்தது.
பின், போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர்கள் சுதாகர், கபில்குமார் சரட்கர், இணை கமிஷனர் கயல்விழி, தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

