/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சந்தை கழிப்பறை மோசம் கோயம்பேடில் போராட்டம் - படம் வேண்டாம்
/
சந்தை கழிப்பறை மோசம் கோயம்பேடில் போராட்டம் - படம் வேண்டாம்
சந்தை கழிப்பறை மோசம் கோயம்பேடில் போராட்டம் - படம் வேண்டாம்
சந்தை கழிப்பறை மோசம் கோயம்பேடில் போராட்டம் - படம் வேண்டாம்
ADDED : ஜூன் 25, 2025 12:16 AM

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில், கழிப்பறைகளை முறையாக பராமரிக்க கோரி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் நேற்று, போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு அலுவலகம் முன் சங்கலி மற்றும் பூட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்காடியில் மொத்த விற்பனை கடைகள், கிடங்குகளில் சில்லரை வியாபாரம், மழைநீர் வடிகால்வாயில் குறைபாடு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், அவர்களிடம் பேசி, ஒரு வாரத்தில் கோரிக்கை மீதான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறுகையில், ''கோயம்பேடு சந்தையில் உள்ள கழிப்பறைகள் இலவசமாக மாற்றப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தபோது முறையாக பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள், தற்போது படுமோசமாக உள்ளன. கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும்,'' என்றார்.