/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜலட்சுமி கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
ராஜலட்சுமி கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 20, 2024 11:39 PM

சென்னை, ஜன. 21--
சென்னை அருகே தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரியின் 22வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவில் ஐ.நா. பருவநிலை மாற்றத்திற்கான குழு தலைவரும், 2021 ம் ஆண்டு சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் மோகன் முன்சிங்கே தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
கல்லுாரியில் 1,604 பேருக்கு இளநிலை பட்டமும், 100 பேருக்கு முதுநிலை பட்டம், 21 பேருக்கு முனைவர் மற்றும் 18 மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கினார்.
பேராசிரியர் மோகன் முன்சிங்கே பேசியதாவது:
சமச்சீரான வளர்ச்சியுடன் இருப்பதே மிகச்சிறந்த உலகம்.
சீரான வளர்ச்சியை எய்திட பொறியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. சமச்சீரான உள்ளீடு சார்ந்த பசுமை வளர்ச்சியை எய்திட பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது.
சுற்றுச்சூழல் சார்ந்த எவ்வித சமரசமும் இன்றி பொருளாதார வளர்ச்சியை பெறுவதற்கு அவர்களது வியூகத் திட்டங்கள் துணை புரியும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது உலகளாவிய பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், அதனை மாற்றி புதியதோர் உலகம் படைத்திட, உலகம் சமச்சீரான வளர்ச்சியை பெற வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.
ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.
சங்கம் மேகநாதன் பேசுகையில், ''கல்வி என்பது வலிமையை ஏற்படுத்துகிறது. வலிமை, நம்பிக்கையை உண்டாக்குகிறது. அதனால் அமைதியை அடைய இயலும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக நடேசன் குழும மேலாண்மை இயக்குனர் சுபாரவிக்குமார், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் அபய் மேகநாதன், ஆலோசகர் சி.ஆர்.முத்துகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர் டாக்டர் எஸ்.என்.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

