/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விடுமுறையிலும் வருவாய் துறை இயங்கும்
/
விடுமுறையிலும் வருவாய் துறை இயங்கும்
ADDED : மார் 26, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்தும் வகையில், விடுமுறை நாட்களிலும் வருவாய் துறை இயங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடைய உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, சொத்துவரி, தொழில் வரி மற்றும் நிறுமவரி செலுத்துவதற்காகவும், தொழில் உரிமம் புதுப்பிக்கதற்காகவும், மாநகராட்சியின் வருவாய் துறை வரும், 29, 30, 31ம் தேதி ஆகிய விடுமுறை நாட்களிலும் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.