ADDED : ஜூன் 25, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, பைக் திருட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு, பட்டாளம் மசூதி தெரு பகுதியில் வசிப்பவர் நியாமதுல்லா, 44, தோல் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது, எதிர் வீட்டில் வசிக்கும் ஷேக் உஸ்மான் என்பவரின் ஹோண்டா ஆக்டிவா பைக்கை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதுகுறித்து நியாமதுல்லா, ஷேக் உஸ்மானுக்கு தகவல் அளித்தார். இருவரும் சேர்ந்து திருடனை பிடித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார், விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சம்சுதீன், 18 என்பதும், அவர் மீது கொலை முயற்சி உள்பட மூன்று குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தன. போலீசார் சம்சுதீனை கைது செய்தனர்.