/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.பி.எப்., வீரர் மீது தாக்குதல்
/
ஆர்.பி.எப்., வீரர் மீது தாக்குதல்
ADDED : ஜன 23, 2024 12:37 AM
கொளத்துார், சென்னை, வில்லிவாக்கத்தில் வசிப்பவர் ஹஜாரி, 37; ஆர்.பி.எப். போலீஸ்காரர். கடந்த ஓராண்டாக, ஐ.சி.எப்.,பில் பணியாற்றி வருகிறார்.
இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். கடந்த 21ம் தேதி வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் உள்ள மார்க்கெட்டுக்கு சாதாரண உடையில், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இவருக்கு பின்னால், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 20 வயது மதிக்கத்தக்க நால்வர், ஹஜாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர் தர மறுத்து, வில்லிவாக்கம் மார்க்கெட்டுக்குள் ஓடிய போது, விரட்டிச் சென்று தலையில் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஹஜாரி, ஐ.சி.எப்., மருத்துவமனையில், இரண்டு தையல் போட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதுதொடர்பாக ஹஜாரி, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

