/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் டிக்கெட் இணையதளத்தில் ரூ.1.08 லட்சம் சுருட்டல்
/
ரயில் டிக்கெட் இணையதளத்தில் ரூ.1.08 லட்சம் சுருட்டல்
ரயில் டிக்கெட் இணையதளத்தில் ரூ.1.08 லட்சம் சுருட்டல்
ரயில் டிக்கெட் இணையதளத்தில் ரூ.1.08 லட்சம் சுருட்டல்
ADDED : பிப் 02, 2024 12:08 AM
வடபழனி,வடபழனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன், 51. தனியார் நிறுவன மேலாளர். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல, ரயில்வே இணையதளம் வாயிலாக ஸ்ரீதரன் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
வேலை பளு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாததால், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தார். ரத்து செய்ததற்கான பணம் திரும்ப வராததால், ஐ.ஆர்.டி.சி., இணையதளத்தில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
மறுமுனையில் பேசிய நபர், ஸ்ரீதரனின் கடன் அட்டை விபரங்கள் மற்றும் ரகசிய எண் உள்ளிட்ட தகவல்களை பெற்று உள்ளார்.
சிறிதுநேரத்தில் ஸ்ரீதரனின் கடன் அட்டை கணக்கில் இருந்து, 1.08 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீதரன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முதற்கட்ட விசாரணையில் இணையதளத்தில் இருந்த மொபைல் எண், ஐ.ஆர்.டி.சி.,யால் பதிவிடப்படவில்லை என, தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

