/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் வாகனத்தை மறிக்க முயன்ற துாய்மை பணியாளர்கள் கைது
/
முதல்வர் வாகனத்தை மறிக்க முயன்ற துாய்மை பணியாளர்கள் கைது
முதல்வர் வாகனத்தை மறிக்க முயன்ற துாய்மை பணியாளர்கள் கைது
முதல்வர் வாகனத்தை மறிக்க முயன்ற துாய்மை பணியாளர்கள் கைது
ADDED : செப் 11, 2025 02:23 AM

சென்னை முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தை மறித்து போராட, மெரினா காமராஜர் சாலையில் தயாரான துாய்மை பணியாளர்கள் 37 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.,நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து, ஆக., 1 முதல் 13ம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு, துாய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பின் உயர் நீதிமன்ற உத்தரவின்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த மாதத்தில், சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா, கொருக்குப்பேட்டை, ரிப்பன் மாளிகை என, அடுத்ததுடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மெரினா காமராஜர் சாலை வழியாக தலைமைச் செயலகம் செல்லும் போது முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தை வழிமறிக்க துாய்மை பணியாளர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக நேற்று காலை, உழைப்பாளர் சிலை அருகே, 37 பேர் தயாராக நின்று கொண்டிருந்தனர். இதையறிந்த, அண்ணாசதுக்கம் போலீசார், அவர்களை கைது செய்து வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.