sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சத்யம், சிவம், சுந்தரம் நடன விழா

/

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சத்யம், சிவம், சுந்தரம் நடன விழா

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சத்யம், சிவம், சுந்தரம் நடன விழா

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் சத்யம், சிவம், சுந்தரம் நடன விழா


ADDED : பிப் 02, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 02, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஸ்ரீதேவி நிருத்தியாலயா நாட்டியக்குழு சார்பில், 15வது 'சத்யம், சிவம், சுந்தரம்' நடன விழாவை, வி.வி.சுந்தரம் துவக்கி வைத்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 31ல் இருந்து வரும் 4ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நடக்கிறது.

இவ்விழா குறித்து, ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் நிறுவனரும், இயக்குனருமான ஷீலா உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:

நடனத்தின் இறைவன் சிவன், நடன குரு, குச்சுப்படி வித்தகர், மறைந்த டாக்டர் வேம்படி சின்ன சத்யம், பெமலட்டூர் பாணி பரத நாட்டிய கலைஞர் ரயில்வே சுந்தரம். இம்மூவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடன விழா நடக்கிறது.

உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கு, இலவச மேடையை வழங்குவதே இந்த விழாவின் நோக்கம்.

இந்தியாவின் பல பாரம்பரிய நடனங்களில் மிளிரும் நட்சத்திரங்கள், இந்த நடன விழாவில் இணைந்துள்ளனர்.

லீலா சாம்சன், பிராகா பாஸல், ராதா ராமநாதன், மொசலிகாந்திஸ், நீனா பிரசாத், ரோஜா கண்ணன், கபிலவேணு, லக்ஷ்மன், பூர்வதனஸ்ரீ, லட்சுமி மேனன், கோபிகா வர்மா, பார்ஷ்வநாத் உபாத்யே போன்றோர், இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நாளில், காமேஸ்வரி கணேசனின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், கிருபாஸ் பைன் ஆர்ட்ஸ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று, குமாரி அஷ்மிதா ஜெயபிரகாஷ், அஞ்சலி விஸ்வேஷ் மற்றும் ப்ரியதர்ஷினி கோவிந்த் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று, தேஷ்னா சாகர் பரதநாட்டியமும், ரோஜா கண்ணன் மற்றும் ப்ரியா முரளி குழுவின் 'திருமயிலை குறவஞ்சி' நடன நாடகமும் அரங்கேறுகிறது.






      Dinamalar
      Follow us