/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.சி. சான்றிதழ் பெற்று வழக்கறிஞரானவர் கைது
/
எஸ்.சி. சான்றிதழ் பெற்று வழக்கறிஞரானவர் கைது
ADDED : ஜன 24, 2024 12:41 AM

துரைப்பாக்கம்,துரைப்பாக்கம், பெருங்குடியை சேர்ந்தவர் ரமேஷ் மணிகண்டன், 43. பி.சி., சமூகத்தை சேர்ந்தவர். இவர், எஸ்.டி., சான்றிதழ் பெற்று, 2006 முதல் 2009ம் வரை, சென்னை அரசு சட்டக்கல்லுாரியில், பி.எல்., படித்தார்.
இவர் மீது வழக்கு இருந்ததால், ஆந்திரா மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நிலம் எங்கள் உரிமை என்ற பெயரில் கட்சி துவங்கி, 2022 பிப். மாதம், சென்னை மாநகராட்சி, 184வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டார்.
அப்போது வேட்பு மனு வாயிலாக, இவர் ஜாதியை மாற்றி மோசடி செய்தது தெரிந்தது. இவர் மீது, பெருங்குடியை சேர்ந்த ரஜினி, 44 என்பவர், 2022 ஏப்ரலில் எஸ்.சி. - எஸ்.டி. ஆணையத்தில், மோசடியாக ஜாதி சான்றிதழ் பெற்றதாக புகார் அளித்தார்.
தீவிர விசாரணைக்குபின், வருவாய்த்துறையால் இவருக்கு வழங்கிய ஜாதி சான்றிதழ், 2023 மே மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இவர் மீது நடவடிக்கை எடுக்க, எஸ்.சி. - எஸ்டி. ஆணையத்தில் இருந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதன்படி, துரைப்பாக்கம் போலீசார், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று, ரமேஷ் மணிகண்டனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

