/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புள்ளியியல் ஆபீஸில் சுயதொகுப்பு முகாம்
/
புள்ளியியல் ஆபீஸில் சுயதொகுப்பு முகாம்
ADDED : ஜன 24, 2024 12:26 AM

சென்னை, புள்ளியியல் அலுவலகத்தில், 2022 - 23ம் ஆண்டிற்கான சுயதொகுப்பு முகாம் நடத்தப்பட்டது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய புள்ளியியல் அலுவலகம் வாயிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான கணக்கெடுப்பை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இதையொட்டி, 2022 - 23ம் ஆண்டிற்கான சுயதொகுப்பு முகாம், அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. முகாமில், துணை இயக்குனர் சந்திரசேகர் வரவேற்பு உரையாற்றினார்.
தமிழக வடக்கு மண்டல துணை தலைமை இயக்குனர் பி.டி.சுபா முகாமை துவக்கி வைத்து, முகாமின் நோக்கம், வழிமுறைகள், தொழிற்சாலையை தேர்வு செய்யும் முறைகள் மற்றும் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இத்துடன், அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வாயிலாக, பங்கேற்பாளர்களுக்கு தனிப்பட்ட கவனம் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

