/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீ அய்யப்பா அறக்கட்டளை பல்துறை மருத்துவ முகாம்
/
ஸ்ரீ அய்யப்பா அறக்கட்டளை பல்துறை மருத்துவ முகாம்
ADDED : ஜன 23, 2024 12:21 AM

சென்னை, அண்ணா நகர் ஸ்ரீ அய்யப்பா அறக்கட்டளை மற்றும் அண்ணா நகர் ஸ்ரீ அய்யப்பா சேவா சமாஜம் இணைந்து, ஆவடி அருகே அரிக்கம்பேடு பகுதியிலுள்ள அறக்கட்டளையின் சுகாதார மையத்தில், இலவச பல்துறை மருத்துவ முகாமை நடத்தின.
சென்னையின் சின்மயா மிஷன் தலைவரும், மத்திய சின்மயா மிஷன் அறக்கட்டளை மண்டல இயக்குனருமான நம்பியார், முகாமை துவக்கி வைத்தார்.
அறக்கட்டளைக்கு, கனரா வங்கியின் துணை பொது மேலாளர் சங்கர், சி.எஸ்.ஆர். திட்டத்தில், 'ஹார்மோன் அனலைசர்' பரிசோதனை இயந்திரத்தை வழங்கினார்.
நிகழ்வில், அறக்கட்டளை தலைவர் மேனன், செயலர் ஜெயசங்கர், அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். அறக்கட்டளை நிர்வாகிகளான டாக்டர்கள் பாஸ்கர், விவேக் மற்றும் குமார், வினு நாயர், ஜெய்தேவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சங்கர நேத்ராலயா, டாக்டர் மோகன் மருத்துவ மையம், மீனாட்சி அம்மாள் மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான மையங்கள் பங்கேற்ற இம்முகாமில், 250க்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, பல்வேறு பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

