/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அகாடமி வெற்றி
/
பள்ளிகளுக்கான கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அகாடமி வெற்றி
பள்ளிகளுக்கான கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அகாடமி வெற்றி
பள்ளிகளுக்கான கிரிக்கெட் செயின்ட் பீட்ஸ் அகாடமி வெற்றி
ADDED : ஜூன் 25, 2025 12:01 AM
சென்னை, சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 143 ரன்கள் வித்தியாசத்தில், பஷீர் அகமது சயீத் பள்ளியை தோற்கடித்தது.
டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், சிட்டி பள்ளி கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. இப்போட்டியில், சென்னையின் பல்வேறு பள்ளிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடந்த போட்டியில், செயின்ட் பீட்ஸ் அகாடமி, 30 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 173 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த பஷீர் அகமது சயீத் பள்ளி, 19.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 31 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது. இதனால், 143 ரன்கள் வித்தியாசத்தில், செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், அடையார் செயின்ட் பேட்ரிக்ஸ் அணி, 30 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 194 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த பால வித்யா மந்திர் அணி, 27.5 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 100 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.