/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில அளவிலான வாலிபால் ஜேப்பியார் பல்கலை முதலிடம்
/
மாநில அளவிலான வாலிபால் ஜேப்பியார் பல்கலை முதலிடம்
ADDED : ஜன 19, 2024 12:14 AM

சென்னை, மாநில அளவிலான வாலிபால் போட்டியில், சென்னை ஜேப்பியார் பல்கலை அணி முதலிடத்தை பிடித்தது.
இளம்புலி விளையாட்டு கழகத்தின் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி நாமக்கல் மாவட்டம், துாசூரில் நடந்தது.
இதில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, எட்டு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடந்தன.
'லீக்' போட்டியில், சென்னை ஜேப்பியார் பல்கலை, 25 - 10, 25 - 13 என்ற கணக்கில், கேரளாவின் செயின்ட் சேவியர் அணியையும், மற்றொரு போட்டியில், 25 - 15, 25 - 14, 25 - 23 என்ற கணக்கில், சேலம் செயின்ட் மேரிஸ் அணியையும் தோற்கடித்தது.
அரையிறுதியிலும் சிறப்பாக விளையாடிய ஜேப்பியார் அணி, 12 - 25, 25 - 14, 25 - 23 என்ற கணக்கில், சேலம் பாரதியார் கல்லுாரியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில், ஜேப்பியார் மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லுாரி அணிகள் மோதின. இதில், 18 - 25, 25 - 13, 25 - 21 என்ற கணக்கில், ஜேப்பியார் பல்கலை வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சென்னை பனிமலர், சேலம் பாரதியார் அணிகள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களைக் கைப்பற்றின.

