/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலுக்குள் நட்டு வைத்த தெரு பெயர் பலகைகள்
/
வடிகாலுக்குள் நட்டு வைத்த தெரு பெயர் பலகைகள்
ADDED : ஜன 24, 2024 12:26 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, ராஜலட்சுமி நகர் மூன்றாவது பிரதான சாலை, 30 அடி அகலம் கொண்டது. வேளச்சேரி விரைவு சாலை, காந்தி சாலையின் இணைப்பாக, இந்த சாலை உள்ளது.
சாலையின் இரு நுழை வாயில் பகுதிகளிலும், ஆக்கிரமிப்பால் 15 முதல் 20 அடி அகலத்தில் உள்ளது.
விரைவு சாலையில் இருந்து, ராஜலட்சுமிநகர் செல்லும் பகுதியில் குறுக்கே மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டதால், மிக்ஜாம் புயல் மழையின்போது சாலையில் வெள்ளம் தேங்கியது.
வடிகால் மேல் பகுதியை உடைத்து, வெள்ளம் வடிய செய்தனர். அப்போது, அருகில் நின்ற பெயர் பலகையையும் தகர்த்தனர். பின், அதை முறையாக வைக்கவில்லை. மாறாக, வடிகாலுக்குள் நட்டு வைத்துள்ளனர். இதனால், வடிகாலுக்குள் அடைப்பு ஏற்படுகிறது. மேலும், பள்ளம் இருப்பது தெரியாமல் பாதசாரிகள் வடிகாலுக்குள் விழும் அபாயம் உள்ளது.
தெரு பெயர் பலகையை முறையாக அமைத்து, வடிகால் பள்ளத்தை மூட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

