/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாட்டிற்கு வந்தது தற்காலிக பஸ் நிலையம் தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

ADDED : ஜூன் 24, 2025 12:21 AM
செங்குன்றம், செங்குன்றம் பேருந்து நிலைய மேம்பாட்டு பணியின் காரணமாக, புழல் ஏரி அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
செங்குன்றம், அண்ணா பேருந்து நிலையத்தில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீடில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, இங்கிருந்து 36 வழித்தடங்களில் 202 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து நிலைய மேம்பாட்டு பணிக்காக, தற்காலிகமாக பேருந்து நிலையத்தை புழல் ஏரி எதிரே உள்ள சாமியார் மடம் காலி மைதானத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது.
தற்காலிக பேருந்து நிறுத்தமிடம் தயாரான நிலையில், அதை சில தனியார் பேருந்துகள், லாரிகள் ஆக்கிரமித்தன. பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்படாமல் இருந்தது. இதனால் பேருந்து நிலைய மேம்பாட்டு பணியும் கிடப்பிலேயே இருந்தது.
இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தற்காலிகமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 202 பேருந்துகளும், இன்று முதல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது.