/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை துறையில் தடம் பதிக்கும் 'தி சென்னை சில்க்ஸ்' குழுமம்
/
நகை துறையில் தடம் பதிக்கும் 'தி சென்னை சில்க்ஸ்' குழுமம்
நகை துறையில் தடம் பதிக்கும் 'தி சென்னை சில்க்ஸ்' குழுமம்
நகை துறையில் தடம் பதிக்கும் 'தி சென்னை சில்க்ஸ்' குழுமம்
ADDED : ஜன 19, 2024 12:24 AM

சென்னை, 'தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தின் புது அங்கமாக, நகை துறையில் 'தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' என்ற புதிய பிராண்ட், கடந்த 15ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை, தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர்கள் பிரசன்ன அங்குராஜ், கண்ணபிரான் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
இந்த புதிய பிராண்ட் பற்றி இயக்குனர்கள் கூறியதாவது:
தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், சுபிட்சத்தின் அடையாளமாக நந்தி அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. கற்பனைக்கு எட்டாத கலை ஆபரணங்கள் மற்றும் ஒளிவு மறைவு இல்லாத நியாயமான விலையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக, இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கிளையை, பெரம்பலுாரில் விரைவில் துவங்க உள்ளோம்.
தங்க நகைகள் அனைத்தும் நுாறு சதவீதம் ஹெச்.யு.ஐ.டி., ஹால்மார்க் தரத்துடனும், வைர நகைகள் அனைத்தும் ஐ.ஜி.ஐ., தரச் சான்றிதழுடனம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.