/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெப்பம் அமைக்கும் பணி கபாலீஸ்வரர் கோவிலில் ஜரூர்
/
தெப்பம் அமைக்கும் பணி கபாலீஸ்வரர் கோவிலில் ஜரூர்
ADDED : ஜன 23, 2024 12:26 AM

மயிலாப்பூர், தைப்பூசத்தை முன்னிட்டு, கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுதும் வரும் 25ம் தேதி, தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது.
சென்னை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் இந்த தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தெப்ப திருவிழாவிற்கு, கோவில் குளத்தில் தெப்பம் அமைக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
தெப்ப திருவிழாவின் முதல் நாளான, வரும் 25ம் தேதியன்று இரவு, 7:00 மணிக்கு, சந்திரசேகர சுவாமி தெப்பத்தில் அருள்பாலிக்கிறார்.
பின், தொடர்ச்சியாக இரு நாட்கள் தெப்பத் திருவிழா, தேரோட்டம் போன்றவை நடைபெறும்.

