/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
20 கூட்டங்களிலும் ஒரே கோரிக்கை நிறைவேறாததால் கவுன்சிலர்கள் கோபம்
/
20 கூட்டங்களிலும் ஒரே கோரிக்கை நிறைவேறாததால் கவுன்சிலர்கள் கோபம்
20 கூட்டங்களிலும் ஒரே கோரிக்கை நிறைவேறாததால் கவுன்சிலர்கள் கோபம்
20 கூட்டங்களிலும் ஒரே கோரிக்கை நிறைவேறாததால் கவுன்சிலர்கள் கோபம்
ADDED : ஜன 19, 2024 12:36 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல குழுவின், 20வது கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில் நடந்தது. இதில், எட்டு கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஈஞ்சம்பாக்கம் மீன் சந்தையில் கழிவுநீர் தொட்டி அமைக்க வேண்டும். சோழிங்கநல்லுார் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு திறப்பது எப்போது?
கண்ணகி நகரில் சாலை போடும் நேரம் தெரிவதில்லை. ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அனைத்து வீடுகளுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என, கவுன்சிலர்கள் பேசினார்.
தொடர்ந்து, கவுன்சிலர்கள் சிலர் பேசியதாவது:
தி.மு.க.,வின் ஏகாம்பரம், 195வது வார்டு: ஓ.எம்.ஆரில் செயல்படும் பெண்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து, அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஏன் ஆய்வு செய்வதில்லை. பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால், யார் பொறுப்பு ஏற்பது?
அ.தி.மு.க.,வின் மேனகா, 197வது வார்டு: 2022ல் 'மாண்டஸ்' புயலில் அடித்து செல்லப்பட்ட நயினார்குப்பம், பனையூர் குப்பம் சாலையை சீரமைக்கவில்லை. பூட்டிய இ- - சேவை மையத்தை திறக்காதது ஏன்?
பா.ஜ.,வின் லியோ சுந்தரம், 198வது வார்டு: காரப்பாக்கம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்களுக்கு ஏன் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை என, 20 கூட்டங்களில் கேட்டுவிட்டேன். அதிகாரிகள் முறையாக பதில் தருவதில்லை.
தி.மு.க.,வின் முருகேசன், 200வது வார்டு: சுனாமி நகர் பூங்காவை மாநகராட்சி வசம் ஒப்படைப்பதில் உள்ள நிர்வாக சிக்கலை நீக்க வேண்டும் என, ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுகிறேன். மாநகராட்சி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு அதிகாரிகள் கூறும் பதில், அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு, ஒரே கோரிக்கையை 20 கூட்டங்களில் திரும்ப திரும்ப தெரிவிப்பதாக கூறி கவுன்சிலர்கள் ஆதங்கப்பட்டனர்.
இதற்கு, அதிகாரிகள் அளித்த பதில், திருப்தி அளிக்காததால், அனைத்து கவுன்சிலர்களும் அதிருப்தி அடைந்தனர். பின், 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

