ADDED : ஜன 14, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு,
சூளை, கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்தவர் பாஸ்கர், 45. இவரது நண்பர் 'காட்டு' ராஜா, 40. இருவரும் கூலித்தொழிலாளிகள்.
நேற்று முன்தினம், மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கரை, ராஜா கட்டையால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜாவை அப்பகுதி மக்கள் பிடித்து, பேசின்பாலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த பாஸ்கர் நேற்று உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த பேசின்பாலம் போலீசார், ராஜாவை சிறையில் அடைத்தனர்.

