/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிழற்குடைக்கு கம்பங்களால் முட்டு அமைந்தகரை பயணியர் அச்சம்
/
நிழற்குடைக்கு கம்பங்களால் முட்டு அமைந்தகரை பயணியர் அச்சம்
நிழற்குடைக்கு கம்பங்களால் முட்டு அமைந்தகரை பயணியர் அச்சம்
நிழற்குடைக்கு கம்பங்களால் முட்டு அமைந்தகரை பயணியர் அச்சம்
ADDED : ஜூன் 25, 2025 12:21 AM

அமைந்தகரை, நெல்சல் மாணிக்கம் சாலையில், முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையால், விபத்து அபாயம் நிலவுகிறது.
அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், 'ஸ்கைவாக்' வளாகம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, வழித்தடம் எண் '47, 47ஏ, 47டி' உட்பட ஏராளமான மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன. தினம் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இங்குள்ள இரும்பினால் ஆன நிழற்குடை சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. தற்காலிகமாக கான்கிரீட்டால் ஆன பெரிய கம்பங்களால் முட்டுக்கொடுத்துள்ளனர். பலத்த காற்று அடித்தால் கம்பங்கள், நிழற்குடை விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பயணியர் கூறுகையில், 'பின்புறத்தில் நடக்கும் தனியார் கட்டுமான பணிகளால் தான், நிழற்குடை சேதமடைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன், பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்' என்றனர்.