/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புளியந்தோப்பு ரவுடிகள் மது போதையில் அட்டகாசம்
/
புளியந்தோப்பு ரவுடிகள் மது போதையில் அட்டகாசம்
ADDED : ஜன 10, 2024 12:31 AM
புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சந்திப்பில், டிகாஸ்டர் சாலையில் பிரியாணி கடைக்கு நண்பர்களுடன் சாப்பிட சென்ற ரவுடி லிங்கம் என்ற கணேசன், 37, மதுபோதையில் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் உதவியுடன் கடைக்காரர்கள் பிடித்து, மூவரையும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல், புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், சிலர் மது போதையில் சிவா, 22, என்பவரிடம் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த சிவா, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி, நியாமத்துல்லா, 29, விஜய், 21, மற்றும் விக்னேஷ், 26, ஆகிய மூவரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.
இதில் மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

