/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் 'ஜாக்கி'யால் உயர்த்தும் பணி துவக்கம்
/
பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் 'ஜாக்கி'யால் உயர்த்தும் பணி துவக்கம்
பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் 'ஜாக்கி'யால் உயர்த்தும் பணி துவக்கம்
பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் 'ஜாக்கி'யால் உயர்த்தும் பணி துவக்கம்
ADDED : பிப் 23, 2024 11:54 PM

வியாசர்பாடி, வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், சூரிய பகவான் வருகை புரிந்து சிவபெருமானை வணங்கியதால், மூலவரான சிவபெருமான் 'ரவீஸ்வரர்' என, பெயர் பெற்றதாக ஐதீகம். 'ரவி' என்றால் சூரியன் என்று பொருள்.
வேதங்களை இயற்றிய வேதவியாசர் வழிபட்ட தலம் என்பதால், இத்தலம் அவர் பெயரால் வியாசர்பாடி என, பெயர் பெற்றது. தமிழகத்தில் வேதவியாசருக்கு என, தனி சன்னிதி இந்த திருக்கோவிலில் மட்டும் தான் உள்ளது.
இங்கே குடி கொண்டிருக்கும் வியாசமுனிவரிடம் ஆசிபெற்ற பிறகே, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ரவீஸ்வரர் கோவிலில், மழைக் காலங்களில் 5 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, வரும் நாட்களில் வெள்ளத்தால் பாதிக்காதபடி, கோவிலை 'ஜாக்கி' உதவியுடன் 8 அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 2.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வியாசை ரவீஸ்வரர் ஆன்மிக நற்பணிக் குழுவினர் கூறியதாவது:
ரவீஸ்வரர் கோவிலில், சிவன் சன்னிதி, அம்மன் சன்னிதி, நந்தி கொடிமரம், சண்டி கேஸ்வரர், ராஜகோபுரம் சன்னிதிகள் உயர்த்துவதற்கும், கட்டுமானத்திற்கும் ஐந்து உபயதாரர்கள் பணம் வழங்குகின்றனர்.
மகாமண்டபம் பணிகளுக்கான, 69.80 லட்சம் ரூபாயை, பொதுமக்கள் நன்கொடையாக வழங்குகின்றனர். அனைத்து பணிகளும் உபயதாரர்கள் நிதியுதவியுடன் செய்யப்படுகிறது.
இதில், சிவன் சன்னிதி உயர்த்துவதற்கு 26 லட்சம் ரூபாயை எங்களது வியாசை ரவீஸ்வரர் ஆன்மிக நற்பணி குழுவினர் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

