/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கமிஷனர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் திருட்டு
/
கமிஷனர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் திருட்டு
ADDED : ஜன 20, 2024 11:37 PM
அரக்கோணம், அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 36. இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். அரக்கோணத்தில் இருந்து ரயில் மூலம் வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று மதியம், வெண்ணிலா வீட்டின் அருகே வசிப்பவர்கள், மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
வெண்ணிலா வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டினுள் பீரோவை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் 5,000 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
வெண்ணிலா கொடுத்த புகார்படி, அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

