/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிசே ஷ தீர்த்த குளத்தில் தெப்போற்சவம் ஏற்பாடு
/
ஆதிசே ஷ தீர்த்த குளத்தில் தெப்போற்சவம் ஏற்பாடு
ADDED : ஜன 23, 2024 12:38 AM

திருவொற்றியூர், சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் உள்ளே பிரம்ம தீர்த்த குளம், வெளியே, ஆதிஷேச தீர்த்த குளம் உள்ளது.
வெளியே இருக்கும் குளத்தில் மழைநீர் தேங்காததால், சில ஆண்டுகள் தெப்போற்சவம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மிக்ஜாம் புயலின் போது, இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளவு கோவில் குளத்தில், 12 படிகட்டு அளவிற்கு மழைநீர் தேங்கியது.
வரும், 26 ம் தேதி தைப்பூசம் அன்று, தெப்பத் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆதிஷேச தீர்த்த குளத்தின் சுற்றுசுவருக்கு வர்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. தொடர்ந்து, கோவில் குளத்தின் படிந்திருக்கும் பாசி செடிகளை, இன்று காலை அகற்றும் பணி நடக்கிறது.
தெப்ப திருவிழா அன்று, தியாகராஜ சுவாமி மற்றும் சந்திர சேகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு, சந்திர சேகரர் உடனுறை திரிபுரசுந்தரி தாயார், தெப்பத்தில் எழுந்தருளி, ஐந்து முறை மைய மண்டபத்தை வலம் வருவார். பின், தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் தலைமையிலான கோவில் ஊழியர்கள் விரிவாக மேற்கொண்டு வருகின்றனர்.

