/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொலை திட்டத்துடன் தகராறு செய்தோர் கைது
/
கொலை திட்டத்துடன் தகராறு செய்தோர் கைது
ADDED : ஜன 19, 2024 12:17 AM
சூளை, சூளை, கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 'பி பிளாக்'கில் வசிப்பவர் கங்காதீஸ்வரன், 44. இந்த குடியிருப்பின் 'ஜி பிளாக்'கில், ஆட்டோவில் வந்திறங்கிய போதை கும்பல் ஒன்று, வீட்டு உபயோக மின்சார மீட்டர்களை உடைத்துள்ளனர். இதுகுறித்து கங்காதீஸ்வரன் தட்டிக் கேட்டுள்ளார். போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கங்காதீஸ்வரனை கத்தியால் வெட்டிஉள்ளது.
தகவலின்படி வந்த பேசின்பாலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது வாலிபர், குன்றத்துாரைச் சேர்ந்த ஈஸ்வரன், 20, இமான், ராகுல் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர்.
விசாரணையில், இமானின் நண்பர் ஒருவர், இதே பகுதியில் வசிப்பதும், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்து, ரகளை செய்த போது சிக்கியதும் தெரிந்தது. இவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

